Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பூஜை ஸ்பெஷல்: திருப்பூரில் இருந்து 110 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பூஜை ஸ்பெஷல்: திருப்பூரில் இருந்து 110 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, பயணிகள் சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன், வரும் 19, 20-ம் தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையும் வருவதால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதையடுத்து, தொழில் நகரான திருப்பூரில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.

இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்த்து, பயணிகள் சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 60 சிறப்புப் பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 30 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதன்படி, மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் மொத்தம் 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னைக்கு 15 பேருந்துகள் வரை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
வேளாண்மையில் பெண் விவசாயிகள்: மகளிர் விவசாயிகள் தினம் கொண்டாட்டம்
அடுத்த செய்தி
சவுத் இந்தியன் வங்கியின் லாபம் 21% உயர்வு

தொடர்புடைய செய்திகள்